உலகின் மிக மோசமான புத்தகம் - சுகிர்தராணி



காணொளி ▶ உலகின் மிக மோசமான புத்தகம் - சுகிர்தராணி

நிசப்தம் பின்னப்பட்ட நள்ளிரவில்
காலக்கிரமமாய்
நிறுத்தப்பட்டிருக்கும் புத்தகங்கள்
அலமாரியிலிருந்து கீழிறங்கி
உறக்கத்திலிருக்கும் என்னைப்
புரட்டிப் புரட்டி வாசிக்கின்றன
முடிந்ததும்
மூலைக்கு ஒன்றாய்
என்னைச் சிதறடித்தபடி
குறிப்பேட்டில் எழுதி விட்டுச் செல்கின்றன
இவள்
உலகின் மிக மோசமான புத்தகம்

சுகிர்தராணி

குரல்: இரா.கவிநிலா

Comments

Popular Posts