மழையற்ற மழை - க.மோகனரங்கன்

காணொளி ▶ மழையற்ற மழை - க.மோகனரங்கன்
நான்
மட்டும்
நனைகிற
மழை
மழையாகவே
இல்லை
அதில்
குளிர் இல்லை
ஈரம் இல்லை
கசியும்
கருணை இல்லை
மறைந்த ஒன்றை
உயிர்ப்பிக்கச் செய்யும்
மந்திரமும் இல்லை
ஆகவே
அது
மழையேயில்லை
- க.மோகனரங்கன்
குரல்: நிவேதிதா சிவசோதி


Comments
Post a Comment