தொடரும் ஆட்டம் - சாம்ராஜ்

காணொளி ▶ தொடரும் ஆட்டம் - சாம்ராஜ்
சிப்பாய்கள் ஒரு தப்படியில் வெட்டப்படுகின்றனர்
குதிரைகள் “ட” வடிவத்தில் தாவுகின்றன.
யானைகள் நேர்க்கோட்டில்,
மதகுரு குறுக்குவாட்டில்,
ஆடிக்களைத்ததில்
எஞ்சி நிற்பது
உன் ராஜாவும்
என் ராணியும்
எட்ட ஒரு குதிரையும்
ஆதித்தச்சன் இழைத்த மேசையில்
தொடங்கிய ஆட்டமிது
இன்னும் முடிந்தபாடில்லை
முடிப்பதாகவும் இல்லை.
- சாம்ராஜ்
குரல்: இரா.பிரபாகர்


Comments
Post a Comment