காலரூபணி - இளங்கோ கிருஷ்ணன்

காணொளி ▶ காலரூபணி - இளங்கோ கிருஷ்ணன்
காலத்தை அள்ளிச் சாம்பலாய்ப் பூசி
காலத்தை அள்ளி வேணியாய் முடிந்து
காலத்தை அள்ளிக் கபாலமாய்ச் சூடி
காலத்தை அள்ளிப் பாம்பாய்ச் சுற்றி
காலமாய் நிற்கிறேன் உன் காதலன்
தேவீ என்னுடலில் திமிறும் மிருகமொன்றைப்
படையலாக்குகிறேன்
என் இதழில் பூத்திருக்கும்
கோடி நூற்றாண்டுப் பூவைக் குழலில் சூட்டுவேன்
ஒரு முறை
ஒரே ஒரு முறை
உன் சிலையிதழ் அறுத்துப் பேசு
என் காலரூபணி
- இளங்கோ கிருஷ்ணன்
குரல்: பால முரளி
நிழற்படம்: வம்சி
நிழற்படம்: வம்சி


Comments
Post a Comment