நெடுஞ்சாலை நடனம் - மாலதி மைத்ரி

காணொளி ▶ நெடுஞ்சாலை நடனம் - மாலதி மைத்ரி
இரவின் கண்ணீரென வழிந்தோடும் நெடுஞ்சாலை ஆளரவமற்ற திசையில் கிடக்க
கனவின் ரூபமாய்த் திரண்டவள் அசையத் துவங்குகிறாள்
தனது சிவப்பு முந்தானையை
காலடியில் புரளவிட்டுச் சுழல்கிறாள்
கலவையான ஆட்ட அசைவுகளின் பாவங்கள் வழியற்றுக்
குவிந்த வாகனவாசிகளை
மிரள வைக்கின்றன
ஊரற்ற சாலையில் யாரிவள் இவளை அகற்றுவது இயலுமாவென
ஒருவக்கொருவர் புலம்பித் தீர்க்க
அவளின் சுழற்சியிலிருந்தே பெருகும் காற்று
அவளையொரு சருகென
அடித்துச் செல்ல
சாலை வெறுமையில் தொங்குகிறது
- மாலதி மைத்ரி
குரல்: சுபா செந்தில்குமார்


Comments
Post a Comment