தியானத்தின் மேல் - நரன்



காணொளி ▶ தியானத்தின் மேல் - நரன்

என்னோடு
இந்த தியானவிரிப்பின்
மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .
கண்களை மூடி
தியானிக்கத் துவங்கினேன்
தியானம் இப்போது
மூலையிலிருந்து
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல்

- நரன்

குரல்: நிவேதிதா சிவசோதி

Comments

Popular Posts