பச்சையம் - இசை



காணொளி ▶ பச்சையம் - இசை

ஒரு மேட்டு வீட்டைக் காட்டி
”அந்த வீட்டு ஆள் ஒரு கொலைகாரன்“ என்றார்கள்.
கூரைமட்டும் கொஞ்சமாய் வெளித்தெரிய
மற்றதனைத்தும்
பச்சையால் மறைக்கப்பட்டிருந்தது
கூரைமீதும் பச்சை ஏறியிருந்தது
”அதுவும் இரட்டைக் கொலை“ என்றார்கள்
அதிலும் ஒரு பெண்...
அதுவும் வண்புணர்ந்து ...
அந்த வீடா... ?
அந்த வீடா ... ?
என்று திரும்ப திரும்பக் கேட்டேன்
பச்சையே ... பச்சையே...
உன்னால் நெஞ்சில் ஏற ஏலாதோ ?

- இசை

குரல்: ப.இளையராஜா

Comments

Popular Posts