பறவை போன திசையில் - ரமேஷ் பிரேம்



காணொளி ▶ பறவை போன திசையில் - ரமேஷ் பிரேம்

மரத்திலிருந்து தொங்கிய உடலை
இறக்கிய பிறகு
அந்தக் கிளையை
வெட்டிவிட்டார்கள்
வழக்கமாக வந்தமரும்
கிளையைத் தேடி
சுற்றிச் சுற்றி பறந்துவிட்டு
வேறு கிளையில் அமர மனமின்றி
வெகுதூஊரம் சென்றுவிட்டது பறவை

உடலைப் புதைத்தார்கள்
கயிற்றை எரித்தார்கள்
கிளையை வெட்டிய
காயத்தில் குருதி
சொட்டிக் கொண்டிருப்பதை
நிறுத்தும் வழி தெரியாமல்
ஊரைக் கைவிட்டுவிட்டுப்
பறவை போன திசையில்
குடிபெயர்ந்தார்கள்.

- ரமேஷ் பிரேம்

குரல்: கெளதம்

Comments

Popular Posts