பிறகுக்கும் பிறகு - கதிர்பாரதி

காணொளி ▶ பிறகுக்கும் பிறகு - கதிர்பாரதி
சருகு உதிர்வதுபோல்
மிக மிருதுவாக
மிக இறுதியாக
மிக இயல்பாக
எல்லாவற்றுக்கும் மேல்
மிகவும் நியாயமாக
நடந்தேறியது பிரிவு.
அதன் பின்
இரவும் இல்லை
பகலும் இல்லை.
இலை தொற்றி
தத்தளிக்கும் எறும்பு
எப்படியாகிலும்
கரை மீண்டுவிடும்
பிறகென்ன?
- கதிர்பாரதி
குரல்: சௌம்யா ராமன்


Comments
Post a Comment