விதி - கலாப்ரியா



காணொளி ▶ விதி - கலாப்ரியா

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

- கலாப்ரியா

குரல்: மதிக்குமார் தாயுமானவன்

Comments

Popular Posts