அந்த அன்பு என்னுடையதல்ல - கண்டராதித்தன்

காணொளி ▶ அந்த அன்பு என்னுடையதல்ல - கண்டராதித்தன்
வெள்ளை நிறத்தில்
நெஞ்சோடு
நான் சேமித்த
இந்த
அன்பையெல்லாம்
யாரோ யாருக்காகவோ
பறித்துக் கொண்டே
இருக்கிறார்கள்
தும்பையை
மாலையாகத் தொடுப்பது
நன்றல்ல
எனவே
அதன் வெண்மையை
பரிசளிப்பதாகச் சொன்னான்
அந்த அன்பைத்தான்
பழகிய தோள்கள் அனைத்திற்கும்
சூட்டிக் கொண்டிருக்கிறேன்
வருவோர் போவோரெல்லாம்
வைத்துவிட்டுச் சென்றதுதான்
தாராளமாக
எடுத்துக் கொள்ளுங்கள்
நிறைய இருக்கிறது
- கண்டராதித்தன்
குரல்: நிவேதிதா சிவசோதி


Comments
Post a Comment