விர்ச்சுவல் ரியாலிட்டி - யவனிகா ஸ்ரீராம்

காணொளி ▶ விர்ச்சுவல் ரியாலிட்டி - யவனிகா ஸ்ரீராம்
கணினித் திரையில் அருவி வழிந்தபோது
கால்நனைத்துப் பழகினேன்
புலி வந்தபோது துப்பாக்கியை
தொட்டுப்பார்த்துக் கொண்டேன்
உதட்டைக் குவித்த பெண்ணை
எழுந்துபோய் முத்தமிட்டேன்
பொரித்த மாமிசங்களைத்தான் அடைய முடியவில்லை
பெண்ணைப் புணர்ந்து அருவியில் குளித்து
துப்பாக்கியால் புலியைச் சுட்டபிறகே
உடைந்த கணினிக்குள் இருந்து
மாமிசத் துண்டுகளை எடுத்துக்கொள்ள முடிந்தது
- யவனிகா ஸ்ரீராம்
குரல்: சேஷாத்ரி
கணினித் திரையில் அருவி வழிந்தபோது
கால்நனைத்துப் பழகினேன்
புலி வந்தபோது துப்பாக்கியை
தொட்டுப்பார்த்துக் கொண்டேன்
உதட்டைக் குவித்த பெண்ணை
எழுந்துபோய் முத்தமிட்டேன்
பொரித்த மாமிசங்களைத்தான் அடைய முடியவில்லை
பெண்ணைப் புணர்ந்து அருவியில் குளித்து
துப்பாக்கியால் புலியைச் சுட்டபிறகே
உடைந்த கணினிக்குள் இருந்து
மாமிசத் துண்டுகளை எடுத்துக்கொள்ள முடிந்தது
- யவனிகா ஸ்ரீராம்
குரல்: சேஷாத்ரி


Comments
Post a Comment