காணொளி ▶ உரையாடலில் பெரும் மழை - அய்யப்பமாதவன்

உரையாடலில் பெரும் மழை வெள்ளமிருக்கும்
பறவைகள் குரலிலிருந்து பறந்து வரும்
சுருண்ட இதயம் சண்ட மாருதத்தில்
பதறும் இலைகள் போல நடனமிடும்
அவள் சொல்லால் உயிர்கள் துளிர்க்கும்
நிலமாகிடுதல் நிகழும்
பாதைகளின் நடுக்கத்தை வாஞ்சையால் வீழ்த்துவாள்
இருண்ட வானம் உலகாகும் வேளை
சுடர்களை எரித்துக்கொண்டிருப்பாள்
மரணத்தின் சாயல் தென்படுகிறபோது
பச்சிலைகளில் வசியம் செய்வாள்
வெறுமைகூடிய பொழுதுகளில்
வசந்தத்தைக் கொணர்வாள்
என் நலன் மட்டும் விரும்பும் அவளுக்காய்
அவளைப் பாடிக்கொண்டிருக்கும் மனம் ததும்புகிறது.

- அய்யப்பமாதவன்

குரல்: கெளதம்