
காணொளி ▶ எதற்கும் எதற்கும் - சமயவேல்
கட்டண வசூலிப்பகம் தாண்டி
ஒரு ஓரமாய்
வெள்ளை ஆமையாய்
நிற்கிறது ஒரு அம்பாஸிடர்
கொஞ்சம் தள்ளி
பெரும் பாரங்களோடு
வரிசையாய் 4 டிரக்குகள்;
வாகை மரங்களைத் தாண்டி
வாறுகாலில் ஒரு சுமோ
தலைகுப்புற நொறுங்கிக் கிடக்கிறது
கிழக்கே
ஒரு சிற்பமாய் அரிவாளோடு
நிற்கிறான்
வலையங்குளம் கருப்பசாமி
திரும்பி செம்மண் கரை ஏறியதும்
தலைக்கு மேலே
ஒரு வெள்ளை விமானம்
தாழப் பறந்து மேலேறுகிறது
எதற்கும்
எதற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
போய்க்கொண்டே இருக்கிறது
என்
மகிழ்
வுந்து.
- சமயவேல்
குரல்: மாதேவன்
ஓவியம்: ஹேமா ராஜ்
0 Comments