ஓநாயின் இசைக்குறிப்புகள் - வெய்யில்

காணொளி ▶ ஓநாயின் இசைக்குறிப்புகள் - வெய்யில்
சோப்புக் குமிழியொன்று
மனநோய் காப்பகத்திற்குள் நுழைகிறது
எஃகுக் கம்பிகளுக்கிடையே
நழுவி நுழையும் குமிழியோடு
குதூகலமிடுகின்றன
துருவேறிய சங்கிலிகள்
மருத்துவர் ஊசியை ஏந்துகிறார்
குமிழி நடுங்குகிறது
காப்பகத்தின் இருளடர்ந்த மூலையொன்றில்
தற்காலிகமாய் பதுங்கிக்கொள்கிறது.
- வெய்யில்
குரல்: லோகேஸ்வரி


Comments
Post a Comment