உதிரிகள் - நேசமித்ரன்



காணொளி ▶ உதிரிகள் - நேசமித்ரன்

கூழாங்கற்கள் எந்த ஆபரணத்தில்
சேர்வதற்கும் காத்திருப்பவை அல்ல
மீன்கள் முத்தமிட்டு
நதி உயரம் குறைந்தால் தட்டான்கள்
இளைப்பாறி
பின்னொரு நாள்
குழந்தைகள் கைகளில் ஞாபகம் ஆகலாம்
மற்றபடி அவை மலைகளின் சேதியை
கடல்களுக்கு கொண்டு செல்லும்
நெடும் பயணிகள்

பயணிப்பதால் மட்டுமே அழகாகும்
கூழாங்கற்களைத் தவிர
பயணிப்பதின் ருசியை நீங்கள்
வேறு யாரிடம் கேட்டறிய முடியும்

- நேசமித்ரன்

குரல்: மாதேவன்

Comments

Popular Posts