தூரிகை - தேவதேவன்

காணொளி ▶ தூரிகை - தேவதேவன்
வரைந்து முடித்தாயிற்றா?
சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாக
வருடிக் கழுவி விடு
கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்.
சுத்தமாய்க் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டுப் விடாதபடி
எப்போதும் மேல்நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப் போட்டுவை
ஒரு குவளையில்.
- தேவதேவன்
குரல்: கார்த்திகா கண்ணன்


Comments
Post a Comment