விதி - லக்ஷ்மி மணிவண்ணன்



காணொளி ▶ விதி - லக்ஷ்மி மணிவண்ணன்

எனக்குத் தெரிந்த
நான்கைந்து தெருநாய்கள்
எப்போது கண்டாலும்
பேருந்துகளை அலற
விரட்டிக் களைத்து
வாயில் நீர் ஒழுக்கும்.
எனக்கும் அதுபோலவே
ஒரு நாளேனும் திவங்க திவங்க
ஒரு பேருந்தையேனும்
விரட்டிக் குரைக்கணும்
என் விதியோ
நான் பேருந்துக்குள்
போகவேண்டியிருக்கிறது

- லக்ஷ்மி மணிவண்ணன்

குரல்: மாதேவன்

Comments

Popular Posts